அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: ஏப்.,25ல் உள்ளூர் விடுமுறை!
ADDED :4596 days ago
மதுரை: மதுரை நகரில் ஏப்., 25ம் தேதி, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால், அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் விதமாக, மே 4ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, என கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்துள்ளார்.