மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4537 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4537 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4537 days ago
நியாய தர்மத்திற்கு முதன்மை தரும் துலாம் ராசி அன்பர்களே! புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு உங்கள் ராசியிலும் ராசிக்கு ஏழாம் இடத்தில் கேதுவும், எட்டாம் இடத்தில் குருவும் அதிக சிரமங்களைத் தரும் நிலையில் உள்ளனர். மே28ல், குரு பாக்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி ஐந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார். இதனால் ஏழரைச்சனியின் பிடியில் சிக்கி மூச்சு விட முடியாமல் தவிக்கும் நீங்கள், சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகளும் வாழ்வில் மறுமலர்ச்சியும் உண்டாகும்.நிதானமாகப் பேசி நற்பெயரைப் பாதுகாத்திடுவீர்கள். சமூக அக்கறையுடன் செயல்பட்டு புகழடைவீர்கள். நல்லவர்களின் அன்பு, ஆதரவும் பெறுவீர்கள்.வீடு, வாகனத்தில் அபிவிருத்தி மாற்றம் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் உங்கள்மீது இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். பூர்வ சொத்தில் பணவரவு பெறுபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புத்திரர்கள் அறிவுத்திறன் வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைவர். புத்திரர்களின் செயல்கள் உங்கள் மனதுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் தரும். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை தாராள செலவில் நடத்துவீர்கள்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிப் போகிற நற்பலன் உண்டு. உடல்நலக்குறைவில் இருந்து மீள்வீர்கள். கடனில் பெரும்பகுதியை செலுத்தும் அளவுக்கு உழைப்பின் மூலம் தாராள பணவரவு பெறுவீர்கள்.கணவன், மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாட்டின் தாக்கம் குறையும். மனதில் ஆன்மிக நம்பிக்கை வளர்ப்பதுடன், ஆன்மிக சுற்றுலாவும் சென்று வருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனையும் உதவியும் சிறப்பாக கிடைத்து சில நன்மைகளைப் பெறுவீர்கள். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு ஓரளவு அனுகூலம் உண்டு. சவுபாக்கியம் நிறைந்த வாழ்க்கை அமையும். இளவயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும். தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் கவனம் இருந்தால் வளர்ச்சி ஏற்படும். திருப்திகர பணவரவு பெறுவீர்கள்.உற்பத்தி, தரத்தின் அளவை அதிகரிக்க கடும் உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். நண்பர்களின் உதவியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி நிறுவனத்தின் நன்மதிப்பை பாதுகாப்பீர்கள். அதிர்ஷ்டவசமாக தொழில் துவங்க வழி பிறக்கும். தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி கிடைக்க யோகம் உண்டு. வியாபாரிகள்: விற்பனையில் இருந்த சரிவுநிலை மாறி, முன்பை விட விற்பனை அதிகமாகும். பணவரவும் அபிவிருத்தியாகும். பழைய பாக்கி வசூலாகி, கடன்களை அடைக்க பயன்படும். குறைந்த விலைக்கு சரக்கு கொள்முதல் செய்ய புதியவர்களின் அறிமுகமும் உதவி கிடைக்கும். பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் குறுக்கீடு எதுவும் அணுகாமல் சுமூகமாக பணிகளை நிறைவேற்றுவர். தாமதமாக நடந்த பணிகள், சற்று முயற்சி செய்தால் வேகமாக முடியும். சக பணியாளர்கள் உதவும் மனப்பாங்குடன் நடந்துகொள்வர். சிலருக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள நிர்வாகம் ஏற்பாடு செய்துதரும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற அலுவலகத்தில் எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வேலைகளை சீக்கிரமாக முடிப்பர். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை, விரும்பிய இடமாற்றம் எளிதாக கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, தாராள பணவரவு கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் நிதியுதவி கிடத்து அபிவிருத்தி பணி மேற்கொள்வர். உற்பத்தி, விற்பனை முன்பை விட அதிகமாகும். அவரவர் ஜாதகத்தில் தசாபுத்தி சாதகமாக இருந்தால் சேமிக்கும் நிலையும் உண்டு. மாணவர்கள்: முயற்சியுடன் படிப்பில் தகுந்த பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். ஞாபகத்திறன் வளரும். படிப்பில் இருந்த மந்தநிலை மாறும். படிப்பதற்கு முன்பை விட கூடுதல் பணம் கிடைத்தாலும், போதுமான அளவு இராது. எனவே, சிக்கனத்தைப் பின்பற்றி சமாளியுங்கள். ஆசிரியர், சக மாணவர்கள் உறுதுணையாக செயல்படுவர். ரசாயனம், தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்கள் முதன்மை தரத்தில் தேர்ச்சிபெற வாய்ப்புண்டு. படிப்பை முடித்து வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்லவர்களின் உதவியால் கவுரவமான பணி கிடைக்கும். அரசியல்வாதிகள்: நியாய, தர்மத்தை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஆதரவாளர்களிடம் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து முக்கியமான பணிகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் இருந்த தொந்தரவு குறையும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி திருப்திகரமாக கிடைக்கும். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. விவசாயிகள்: விவசாய பணிகளை மேற்கொள்ள தேவையான பணவசதி, இடுபொருள் திருப்திகரமான அளவில் கிடைக்கும். மகசூல் முன்பை விட அதிகமாகும். தானியங்களுக்கு ஓரளவு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. செல்ல வேண்டிய கோயில்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் நல்லோர் உதவியும், பலவித நன்மைகளும் கிடைக்கும். பரிகார பாடல்: விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான்- விநாயகனேவிண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்தண்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.
4537 days ago
4537 days ago
4537 days ago