மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4537 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4537 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4537 days ago
புதிய எண்ணங்களை செயல்படுத்துவதில் ஆர்வமுள்ள மீனராசி அன்பர்களே! புத்தாண்டில் பிரதான கிரகங்களில் கேது ராசிக்கு இரண்டாம் இடத்திலும் சனி, ராகு எட்டாம் இடத்திலும் உள்ளனர். ராசிக்கு மூன்றில் உள்ள குரு, மே28ல், நான்காம் இடமான மிதுனத்திற்கு அர்த்தாஷ்டம நிலைக்கு பெயர்ச்சியாகிறார். பிராதன கிரகங்களின் அமர்வு சிரமமான பலன்களை தரும் வகையில் உள்ளது. இதனால் நீங்கள் தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம்.அஷ்டமச்சனி நடப்பதால், நீதி, நேர்மையுடன் நடக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடந்த காலத்தில் சேர்த்த பொருளை பாதுகாத்துக் கொள்வதில் கவனம் வேண்டும். ஏனெனில், இந்த சமயத்தில் வருமானம் குறையும் என்பதால், சேமிப்பு பணமே தக்க சமயத்தில் கை கொடுக்கும். சமூகத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் சூழ்நிலைகள் தென்படுவதால், கவனமாக செயல்படுவது அவசியம்.தாய்வழி உறவினர்கள் உங்களின் உதவியை அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதைத் தர முடியாத சூழ்நிலையில், உங்களை தேவையின்றி பகைத்துக் கொள்ளும் சூழல் உண்டு. வீடு, வாகனத்தில் நம்பகக்குறைவான எவருக்கும் இடம் தர வேண்டாம். புத்திரர்களின் பிடிவாத செயல்களை சரிசெய்வதிலும், அவர்களைக் கண்டித்து வழிநடத்துவதிலும் இதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். தவிர்த்தால் அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கவனம்.குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்காக சொத்து ஆவணத்தின் பேரில் கடன் பெறுபவர்கள், தனியாரிடம் வாங்குவதைத் தவிர்த்து வங்கிகளில் பெறுவது நல்லது. நல்ல பழக்க வழக்கங்களுக்கு ஊறு விளைவிக்கும் சந்தர்ப்பமும், அதனால் உடல்நலக்கேடும் வரலாம். எனவே, நண்பர்களுடன் போதை மற்றும் தீதுதரும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். அவர்கள் தரும் நியாயமான உதவியை மட்டும் ஏற்றால் போதும். உடல்நிலை சுமாராக இருக்கும். சுயதொழில் துவங்க விரும்புபவர்கள் இந்த ஆண்டு திட்டத்தை ஒத்தி வைப்பதே நல்லது.எதிரிகளால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொந்தரவு ஏற்படும். கணவன், மனைவி குடும்பப் பொறுப்புக்களை உணர்ந்து, விட்டுக் கொடுத்து செயல்பட்டால் தான் குடும்பத்தில் நிம்மதியைக் காண முடியும். தொழிலதிபர்கள்: உற்பத்தியை அதிகரிப்பதிலும் புதிய ஒப்பந்தங்களை பெறுவதிலும் மந்தநிலை தென்படும்.நல்லவர்களின் உதவி, ஆலோசனையைப் புறக்கணிக்காமல், அதன்படி செயல்படுவது நல்லது. உற்பத்தி பொருளின் விலையைக் குறைத்தல், இன்முகம் காட்டுதல் ஆகியவையே ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும். லாபம் குறைவாகவே இருக்கும். அரசின் தொழிற்சட்டங்களை தவறாமல் பின்பற்றுவதால் தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். தொழிலதிபர் சங்கங்களில் வகித்த பதவியில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தொழிற்சாலையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குவது நல்லது. வியாபாரிகள்: சந்தையில் அதிக போட்டியை சந்திப்பீர்கள். லாபம் குறைத்து விற்பதால் மட்டுமே வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடரும். லாபம் அதிகம் எதிர்பார்க்க இயலாது. கடன் வாங்கி கொள்முதல் செய்வதைத் தவிர்க்கவும். சரக்கு தீர தீர கொள்முதல் செய்தால் போதும். கூடுமான வரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பதால், பணப்பிரச்னை வராமல் தவிர்க்கலாம். சிலரது வற்புறுத்தலுக்காக அனுபவம் இல்லாத வியாபாரங்களைத் துவங்க வேண்டாம். பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உள்ளாவர். பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். சக பணியாளர்கள் உதவும் மனப்பாங்குடன் செயல்படுவர். முக்கிய தேவைகளுக்காக சேமிப்பு பணம் செலவாகும். கடன் பெறுகிற நிலையும் உண்டு. பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஒருமித்த மனதுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் நிதான அணுகுமுறை நல்லது. குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவது நல்லது. உறவுக்காரப் பெண்களிடம் குடும்பத்தின் பழைய விவகாரம் குறித்து பேசினால், தேவையற்ற சண்டையே வரும். யாரிடமும் பேச்சில் நிதானம் அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் கடன் கிடைக்கிறதென்று, தொழிலை விரிவுபடுத்தும் பணியை செய்ய வேண்டாம். இது தேவையற்ற சிக்கலுக்கு வழிவகுக்கும். லாபம் குறைவாக இருக்கும். மாணவர்கள்: வெளியிடங்களுக்கு சுற்றுவதில் ஆர்வம் ஏற்படும். படிப்பில் கவனம் குறையும். கவனத்தை படிப்பின் மீது மட்டும் திருப்பி, கடும் பயிற்சி மேற்கொள்வதால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். பணத்தை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்துவது நல்லது. படிப்பை முடித்து வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் பணி கிடைக்கும். பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். சாகசம் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம். அரசியல்வாதிகள்: உங்களின் எதிர்பார்ப்பு, தகுதிக்கு மீறி இருப்பதாக எதிர்மனப்பாங்கு உள்ளவர் விமர்சிப்பர். மனதில் சோர்வும் முயற்சிகள் நிறைவேறுவதில் தாமதமும் இருக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். ஆதரவாளர்களிடம் பெற்ற புகழை அக்கறையுடன் பாதுகாத்துக் கொள்வது நல்லது. சமரச பேச்சுக்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். புத்திரர்கள் உங்களின் அரசியல் பணிக்கு ஓரளவே உதவுவர். சிலர் கட்சியிலிருந்து விலகி புதுக்கட்சிக்கு மாறும் எண்ணம் கொள்வர். விவசாயிகள்: பயிர் வளர்க்க செலவு அதிகரிக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு அபிவிருத்தியும் சுமாரான லாபமும் உண்டு. நிலப்பிரச்னைகள் இழுத்தடிக்கும். வங்கிகளில் பெற்ற கடனை செலுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். செல்ல வேண்டிய கோயில்: மதுரை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயில் பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால், மேலே சொல்லப்பட்ட கஷ்டங்கள் பனியாய் கரைவதை கண்கூடாய் காண்பீர்கள். பரிகார பாடல்: ஆடிப்பாடி அகம் கரைந்து, இசைபாடிப்பாடி கண்ணீர் மல்கி, எங்கும்நாடிநாடி நரசிங்கா வென்றுவாடி வாடும் இவ் வாள்நுதலே.
4537 days ago
4537 days ago
4537 days ago