உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு ஏப் 7, சிறப்பு பால் அபிஷேகம்

பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு ஏப் 7, சிறப்பு பால் அபிஷேகம்

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேய சுவாமிக்கு, ஏப் 7ம் தேதி) சிறப்பு பால் அபிஷேகம் நடக்கிறது. திண்டிவனம்  புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடீ கோயிலில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு, பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, சிறப்பு பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதேபோல், ஏப் 7ம் தேதி) மாலை 4.30 மணியளவில் பால், பன்னீர், மஞ்சள் மற்றும் வாசனை மங்கள திரவியங்கள் கூடிய திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அபிஷேக ஏற்பாடுகளை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், இணைச் செயலாளர் திருமலை மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !