உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை ராசி பலன் (14.4.13 முதல் 14.5.13 வரை)

சித்திரை ராசி பலன் (14.4.13 முதல் 14.5.13 வரை)

மேஷம்: செலவு கூடும்!

நல்லதை மட்டுமே செய்ய விரும்பும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் ஐந்து கிரகச்சேர்க்கை இருந்தாலும், இதில் சுக்கிரன் மட்டும் நற்பலன் வழங்கக் காத்திருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் குருவால் சீரான பணவரவு இருக்கும். அதே சமயம் செலவு அதிகரிக்கும். சகோதரர்களிடம் பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்புப்பணி செய்ய நேரிடும். தாயின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்யும் கட்டாயம் உருவாகும்.  பூர்வீகச் சொத்தில் வருமானம் இருந்தாலும், அதற்கேற்ப செலவும் காத்திருக்கும். எதிரிகளிடமிருந்துவிலகி இருப்பது அவசியம்.  கடனில் ஒருபகுதியைச் செலுத்தும் முயற்சி வெற்றி பெறும். தம்பதிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்படவாய்ப்புண்டு. ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து செயல்படுவது அமைதிக்கு வழிவகுக்கும். உறவினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனையும், உதவியும் கிடைக்கும். தொழிலதிபர்கள் அளவான மூலதனம், கடின உழைப்பு ஆகியவற்றால் ஓரளவு வளர்ச்சி அடைவர். வியாபாரிகள் வாடிக்கையாளர் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து நடப்பது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் மிதமான உற்பத்தியும், அதற்கேற்ப வருமானமும் காண்பர். அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு லாபம் பெறுவர். மாணவர்கள் சோம்பலைப் புறக்கணிப்பது நல்லது. விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தைக் கல்வியில் காட்டுவது அவசியம்.

பரிகாரம்: சூரியனை வழிபட்டால் வாழ்வில் வளம் கூடும்.
உஷார்நாள்: 27.4.13 காலை 9.11- 29.4.13 காலை 11.42.
வெற்றி நாள்: ஏப்.16,17   
நிறம்: ஆரஞ்ச், நீலம்             
எண்: 7,8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !