உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சநதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

பஞ்சநதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

திருபுவனை: திருவாண்டார்கோவில் பஞ்சநதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருவாண்டார்கோவில் பஞ்ச நதீஸ்வரர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. 8.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இரவு 8 மணிக்கு சாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !