சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் கொடியேற்றுவிழா
ADDED :4640 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு, மூன்று மாத கம்பத்தில் கொடியேற்று விழா நடந்தது. இக்கோயிலில், வைகாசி திருவிழா 17 நாட்கள் நடப்பது வழக்கம். முன்னதாக, மூன்று மாத கொடியேற்றம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இரவு 8.30 மணிக்கு பூசாரி கணேசன், கொடியை சுமந்து ரத வீதி சுற்றி கோயில் வர, பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க, கொடியேற்றப்பட்டது.