உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி ஹோமம்

மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி ஹோமம்

ஓசூர்: கெலமங்கலம் அடுத்த தொட்டபேளூர் கோபசந்திரம் பிளேக் மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி மஹா சண்டி ஹோமம் நடந்தது. கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் மழையில்லாமல் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், விவசாயம் கேள்வி குறியானது. குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கெலமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள், தொட்டபேளூர் கோபசந்திரம் கிராமத்தில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் நேற்று மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் மஹா சண்டி ஹோமம் நடத்தினர். வெங்கடேஷ்வர சுவாமிகள், பூஜையை முன்னின்று நடத்தினார். விநாயகர் பூஜை, புண்ணியவாசனம், 13 வகை பூர்ணாகுதி, தீபராதனை உபச்சாரம் ஆகிய பூஜைகள் நடந்தது. இந்த பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !