மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4524 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4524 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4524 days ago
மயிலாடுதுறை: சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண் டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட் டைநாதர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு, அம்பாள் ஞானப்பால் வழங்கியதால் திருஞானசம்பந்தர் தனது 3வது வயதில் முதல் தேவார பாடலை பாடினார் என்பது ஐதீகம். இதனை போற்றும் வகையில் இவ்வாண்டு திருமுலைப்பால் விழா தருமை ஆதினம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசி க ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷே க, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஓதுவார்கள் தேவாரம் பாட திருஞன்சம்பந்தர் பல்லக்கில் பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளினார். இதனையடுத்து மலைக்கோவிலிலிருந்து புஷ்ப பல்லக்கில் வந்த உமையம் மை பிரம்ம தீர்த்த கரையில் எழந்தருள மதியம் 2.30 மணிக்கு தருமை ஆதின ம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை யில் திருஞானசம்பந்தருக்கு தங்கக் கின்னத்தில் அம்பாள் ஞானப்பால் வழங் கும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலிலிருந்து சுவாமி, அம்பாள் ரிஷபவாகனத்தில் பிரம்ம தீர்த்க்கரையில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தனர். அப்போது சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தருக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பலா, வாழை, பேரிட்சைப்பழங்கள், சர்க்கரை கலந்த பாலை சுவாமி, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து குழந்தைகள் ஞானம் பெற பிரார்த்தனை செய்தனர். முன்னதாக ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஓதுவாருக்கு திருமுறைக்கலாநிதி என்ற பட்டத்தை தருமை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி வழங்கினார். திருச்சி மவுனமடம் கட்டளை விசாரணை குமாரசாமி தம்புரான் சுவாமிகள், திருக்குவளை கட்டளை விசாரணை திருஞானசம்பந்த தம்புரான் சுவாமிகள், சீர்காழி சட்டை நாத தேவஸ்தான கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்புரான் சுவாமிகள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை திருஞானசம்பந்தர் பல்லக்கில் முக்கிய வீதிகள் வழியே திருக்கோலக்காவில் உள்ள ஓசைநாயகி சமேத தாளபுரீசுவரர் சுவாமி கோவிலுக்கு சென்று பதிகம் பாடி பொற்றாளம் பெற்று இரவு சீர்காழி பிரம்மபுரீஸ்வரசுவாமி கோவிலுக்கு மீண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
4524 days ago
4524 days ago
4524 days ago