கூவாகம் தேர் திருவிழா: சிறப்பு பஸ்கள் இயக்கம்!
விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோவில், தேர்திருவிழாவுக்கு செல்வோருக்கு வசதியாக, அரசு சிறப்பு பஸ்கள், இயக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், நாளை 24ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. பல மாநிலங்களிலிருந்தும், திருநங்கைகள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் கலந்து கொள்கின்றனர். பொதுமக்களின் வசதிக்காக, சென்னை, விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து, கூவாகத்திற்கு இன்று, 23ம் தேதியும், நாளை, 24ம் தேதியும், 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், வரும் 25ம் தேதி, சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், 550 சிறப்பு பஸ்கள், நாளை 24 ம் தேதி முதல், இயக்கப்படுகின்றன.