உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு

பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. உற்சவத்தின் சிறப்பு அம்சமாக கருடசேவை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. பெருமாளுக்கு நகைகள் மற்றும் பட்டாடை அணிவித்து அலங்காரம் செய்து கருட வாகனத்தில் எழுந்தருள செய்தனர். சேவை, சாற்று முறை, அலங்கார தீபங்கள் வழிபாடு நடத்தப்பட்டது. வீதியுலாவில் பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். பக்தர்கள் நாம சங்கீர்த்தனா பஜனை பாடல்களை பாடி சென்றனர். இன்று பிற்பகல் 5 மணிக்கு பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 25ம் தேதி சித்திரை திருத்தேர் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !