சுந்தரபெருமாள் கோவிலில் உழவர் பெருவிழா
ADDED :4631 days ago
கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவிலில் உழவர் பெருவிழா நடந்தது.விழாவிற்ரு பஞ்., தலைவர் மணிமேகலை சேதுராமன் முன்னிலை வகித்தார். கும்பகோணம் பஞ்., யூனியன்குழுத் தலைவர் மகாலிங்கம் பேசினார்.வேளாண் உதவி இயக்குநர் லெட்சுமிகாந்தன் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார். துணை வேளாண் அலுவலர் மகாலிங்கம் மண்மாதிரி எடுக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார். விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் ஆனந்தகுமார் மற்றும் தோட்டக்கலைதுறை, வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப கருத்துகள் மற்றும் செயல் விளக்கம் கொடுத்தனர்.