உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி சுவாமி வீதியுலா!

ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி சுவாமி வீதியுலா!

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், நேற்று ஆனந்த விமான வாகனத்தில், பார்த்தசாரதி சுவாமி வீதியுலா வந்தார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், கடந்த 24ம் தேதி முதல், சித்திரை பெருவிழா நடந்து வருகிறது. இதில், நேற்று அதிகாலை 6:00 மணிக்கு, ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி சுவாமி நாச்சியார்களுடன் எழுந்தருளினார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கருவறை மேல் உள்ள விமானத்திற்கு, "ஆனந்த விமானம் என்று பெயர். அந்த பெயரில் அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட வாகனத்தில், நேற்று சுவாமி வீதியுலா வந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தங்க முலாம் பூசப்பட்ட, இந்த யானை வாகனம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !