நரசிம்ம பெருமாள் கோவிலில் நாச்சியார் உற்சவம்
ADDED :4522 days ago
சிங்கபெருமாள்கோவில்: பாடலாத்ரி நரசிம்ம பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.சிங்பெருமாள்கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. 4ம் நாளான நேற்று முன்தினம், சேஷ வாகன உற்சவம் நடந்தது. 5ம் நாளான, நேற்று காலை 7:00 மணிக்கு, நரசிம்ம பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்தார். மாலை, யாளி வாகன உற்சவம் நடந்தது. இதில், எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். நாளை, சூர்ணா அபிஷேகம் நடைபெற உள்ளது.