உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

தென்காசி: தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மிருத்ஸங்கரணம், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி, கருடப் பிரதிஷ்டை மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. பிரமோற்சவத்தின் துவக்க நாளான நேற்று காலை கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதனையடுத்து சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கட்டளைதாரர்கள் தென்காசி அழகுராஜா, சுரேஷ் ராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமர பூபாரம் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (22ம் தேதி) இரவு சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸிம்ஹவாகனத்திலும், 23ம் தேதி சிறிய திருவடி ஹனுமார் வாகனத்திலும், 24ம் தேதி சேஷ வாகனத்திலும், 25 மற்றும் 26ம் தேதிகளில் பெரிய திருவடி கருட வாகனத்திலும், 27ம் தேதி குதிரை வானகத்திலும், 28ம் தேதி பெரிய திருவடி கருட வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும், 30ம் தேதி காலை 9 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !