பட்டமங்கலத்தில் மே 26 ம் தேதி குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம்
ADDED :4527 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே, பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, மே 26 ல், சிறப்பு குருஹோமம் நடக்கிறது. மே 28 இரவு 9.03 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி, குரு தலமான பட்டமங்கலம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி சன்னதியில், சிறப்பு குரு ஹோமம், மே 26ல் காலை 7 க்கு துவங்கி, பகல் 12 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. குருப்பெயர்ச்சி தினமான, மே 28 அதிகாலையில், கோயில் நடை திறக்கப்படும்.இரவு 9.03க்குப் பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, வெள்ளி அங்கியில் குருபகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.