சோரியாங்குப்பத்தில் தேர் திருவிழா
ADDED :4552 days ago
பாகூர்: சோரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 15ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று தேர் திருவிழா நடந்தது. அதையொட்டி, 1,008 அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. சோரியாங்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தியாகராஜன், ஏ.எப்.டி., சேர்மன் பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.