உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேங்காய் உடைத்து வழிபாடு!

தேங்காய் உடைத்து வழிபாடு!

அவிநாசி:அவிநாசி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று 108 தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நகர தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மழை பொழிந்து, மக்கள் சுபிட்சமடைய வேண்டும்; மதமாற்ற தடுப்பு மாநாடு வெற்றி பெற வேண்டி, கோவில் முன்பகுதியில் பிரார்த்தனைசெய்யப்பட்டது. வேண்டுதலுக்காக, இந்து முன்னணியினர், 108 தேங்காய்களை உடைத்தனர்.நகர பொது செயலாளர் கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய அமைப்பாளர் முக்தீஸ்வரன், திருமுருகன்பூண்டி நகர தலைவர் சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !