கரிவலம்வந்தநல்லூரில் பிரதோஷ விழா
ADDED :4583 days ago
திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பால்வண்ணநாதசுவாமி சன்னிதி கொடிமரத்திற்கு அருகேயுள்ள நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள்பொடி உட்பட பல்வேறு அபிஷேகம்,சுவாமி சந்திரசேகர் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் மும்முறை பவனி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு கமிட்டியார், அர்ச்சகர்கள்,கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.