உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதச் சித்தர் விழா

மாதச் சித்தர் விழா

புதுச்சேரி: புதுச்சேரி பதினெண் சித்தர் மெய்ந்நெறிக் கழக ஒன்பதாம் மாதச் சித்தர் விழா நடந்தது. கழக பொருளாளர் ஜானகிராமன் வரவேற்றார். புதுச்சேரி இலக்கியப் பொழில் இயக்கியக்கழக நிறுவனர் பூங்கொடி பராங்குசம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கோவிந்தராசு கொங்கணச்சித்தர் குறித்து சிறப்புரையாற்றினார். செயலாளர் பிரபாகரன் மூலிகை வைத்திய சிறப்புகள் குறித்து பேசினார். செயற்குழு உறுப்பினர் அமிர்தவள்ளி இணைப்புரை வழங்கினார்.நிகழ்ச்சியில், துணைத் தலைவர் வேணுகோபால், கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர் பூங்குழலி பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கழக நிறுவனர் இளமதி ஜானகிராமன், டாக்டர் பிரபாகரன் செய்திருந்தனர்.செயற்குழு உறுப்பினர் செங்கமலத்தாயார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !