இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் !
ADDED :4493 days ago
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், பருவமழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. யாகத்தை விக்ணேஷ் சிவாச்சாரியார் செய்தார். அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூஜாரி தலைமை வகித்தார்.செயல்அலுவலர் பெ.தனபாலன் முன்னிலை வகித்தார். பரம்பரை அறங்காவலர்குழு பூஜாரிகள், கோயில் பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.