தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா!
ADDED :4521 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பால், பன்னீர் அபிஷேகங்கள் நடந்தன. பக்தி பாடல் மற்றும் விளக்குப் பூஜை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேரோட்டமும், அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.