விநாயகர் கோவிலில் பாலாலயம்
ADDED :4489 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், அன்னக்காவடி விநாயகர் கோவிலில், பாலாலயம் விழா நடந்தது. திருக்கழுக்குன்றத்தில், அன்னக்காவடி விநாயகர் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், சிதைந்து காணப்பட்டது. இதை புதுப்பித்து, புதியதாக கோவில் கட்ட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து, புதிய கோவில் கட்ட, அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதற்கான முழு செலவு, நன்கொடையாளர் மூலம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று காலை, 6:30 மணிக்கு, பாலாலயம் விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, நன்கொடையாளர்கள் செய்திருந்தனர். இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.