உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவால்கள் நிறைந்த வாழ்வில் வெற்றிபெற எளிய வழி!

சவால்கள் நிறைந்த வாழ்வில் வெற்றிபெற எளிய வழி!

வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. வாழ்க்கையை துணிச்சலுடனும், மன உறுதியுடனும் எதிர்கொள்வதற்கு பழக வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கு உரியது. இனிமையானது வாழ்க்கை பல எதிர்பாராத திருப்பங்களை கொண்டது. அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ நமக்கு நம்பிக்கையும், மன உறுதியும் மிக மிக அவசியம். நீங்கள் வீழ்த்தப்பட்டதாக நீங்களே எண்ணுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் வீழ்த்தப்பட்டு விட்டீர்கள். உங்களிடம் தைரியம் இல்லை என்று எண்ணுகிறீர்களா? உங்களிடம் நிச்சயமாக தைரியம் இருக்காது. நீங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தில் உங்களால் வெற்றிபெற இயலாது என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் எதையாவது இழக்கப் போவதாக எண்ணுகிறீர்களா? நீங்கள் அதை இழந்தே விட்டீர்கள். வெற்றி ஒருவர் உள்ளத்தில் இருந்து தான் உருவாகிறது. எனவே நம்மால் முடியும் என்று நினைத்து செயல்பட வேண்டும். மற்றவரைவிட நான் வல்லவர் என்று உங்களை கருதிக் கொள்கிறீர்களா? சந்தேகமேயில்லை. நீங்கள் வல்லவர்தான். நான் வல்லவன் என்ற சிந்தனை ஒருவனை உயர்த்துகிறது. நான் தான் வல்லவன் என்று எண்ணும் போது அந்த ஆணவம் அவனை அழிவிற்கு கொண்டு செல்கிறது. நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்பினால், உயர்வாக எண்ணுங்கள். வெற்றி பெற, வெற்றி பெறுகிற மனிதர்கள் அனைவருமே சிந்திக்கின்றனர். நம்மால் முடியும் என்று நம்புகின்றனர். அந்த நம்பிக்கைத்தான் அவர்களை அந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. எனவே நீங்களும் உங்களால் முடியும் என்று நம்புங்கள், உங்களைத் தேடி வெற்றி வந்து கொண்டிருக்கிறது. இறைவன் துணை இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !