உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் குவியும் கழிவு துணி!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் குவியும் கழிவு துணி!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக பழைய துணிகளை விட்டு செல்கின்றனர். இவற்றை அகற்றாமல் இருப்பதால், துர்நாற்றம் வீசுகி றது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஈரத்துணியை கடலில் விட்டு விடுவர். இவை கரையில் ஒதுங்கி தேங்கும் போது, துர்நாற்றம் வீசுகிறது. தீர்த் தம் மாசுபட்டதால், பக்தர்கள் முகம் சுளித்து நீராடுகின்றனர். கழிவு துணிகளை அகற்றி, கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் பணியை, நகராட்சி நிர்வாகம், தனியாருக்கு டெண்டர் விட்டது. இதில், ஒப்பந்ததாரருக்கு அதிக லாபம் கிடைத்தாலு ம், ஆண்டுக்கு, நகராட்சிக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே, வருமானம் கிடைத்தது. இதைமாற்றி, குறைந்த பட்சமாக 3 லட்ச ரூபாய்க்கு, டெண்டர் விட, கமிஷனர் முயற்சித்தார். இந்நிலையில், ஒப்பந்ததாரர் கோர்ட்டில், இடைகால தடை வாங்கியதால், அக்னி தீர்த்த கரையில், கழிவு துணி அகற்றுவதில், தொய்வு ஏற்பட்டது. கடல் மாசுபடுவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறியதாவது: சுகாதாரத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !