உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர் பேட்டையில் கும்பாபிஷேகம்

உளுந்தூர் பேட்டையில் கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத் தில் உள்ள பெரியாயி அம் மன் கோவில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷே கம் நாளை நடக்கிறது. இதையொட்டி கடந்த 11ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு கோ பூஜை, சர்ப்ப பூஜை, ரிஷப பூஜைகள் நடந்தன. இன்று காலை 8 மணி க்கு யாக பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, பிர்மசாரி பூஜை, சன்யாசி பூஜை நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை 6 மணிக்கு யாக சாலை பூஜை, 9 மணிக்கு பூர்ணாகுதி, 9.30 மணிக்கு கடம் புறப்பாடும், 10.15 மணிக்கு பெரியாயி அம்மனுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10.30 மணிக்கு தீபாரதனையும், மாலை 6 மணி க்கு மகா அபிஷேகம், தீபாரதனை நடக்கிறது. தமிழாசிரியர் பாலசுப்ரமணியன் ஆன்மீக சொற் பொழிவு தினசரி மாலை நேரங்களில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !