சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா
ADDED :4582 days ago
அன்னூர்: கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது. பெருமாள் கோவிலில் மாலை 4.30 மணிக்கு, விஸ்வக்சேனர் பூஜை நடக்கிறது. 5.00 மணிக்கு ஐந்தாம் ஆண்டாக சுதர்ஸன ஹோமம் துவங்குகிறது. பின், திருமஞ்சனம், மகா தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி உட்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.