இயற்கையின் அம்சத்தையே தெய்வமாக வழிபடும் வழக்கம் ஏன்?
ADDED :4569 days ago
நம் முன்னோர் ஏற்பாட்டினை என்னவென்று சொல்வது! மலையின் மீது கோயில் கட்டி காலாற மலை மீதேறி மூலிகை காற்றை வாங்கி புத்துணர்வுக்கு வழிவகுத்தனர். பெரிய தெப்பக்குளங்களை அமைத்து, தெப்பத்திருவிழா நடத்தி நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தனர். நிலத்தடி நீருக்கு முக்கியத்துவம் தந்தனர். தலவிருட்சம் என்ற பெயரில் பழமையான மரம்,செடி, கொடிகளைப் பாதுகாக்க முயற்சித்தனர். இயற்கை வேறு, இறைவன் வேறாக நினைக்கக் கூடாது. இயற்கை முழுதும் இறைவனின் அம்சமே.