உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை!

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை!

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி, லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, நூறாயிரம் மலர் தூவி அர்ச்சனைகள் செய்யப்பட்டது. ஆடிவெள்ளியை முன்னிட்டு காலை 7மணிக்கு பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடந்தது. மாலை 6.30 மணிக்குமேல் மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. மாரியம்மன் கோயிலிலும் காலை,மாலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில்,  ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் சண்முகமுத்தரசப்பன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம்: தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. சிவசக்தி ஆன்மிக அறக்கட்டளை, காமாட்சி அம்மன் ஆராதனை குழு சார்பில் அன்னதானம் நடந்தது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !