ஒரு தலை பிரம்மன்!
ADDED :4462 days ago
பிரம்மனுக்கு நான்கு தலைகள் உண்டு. ஆனால் ஒரே ஒரு தலையுடன் உள்ள பிரம்மன், கோயமுத்தூர் மாவட்டம் கூளநாயக்கன்பட்டியில் உள்ள மலையாண்டி சாமி கோயிலில் இருக்கிறார். இவருக்கு ஒரு தலையும், நான்கு கைகளும் உள்ளன. வலக்கையில் அபய முத்திரையும், இடக்கையில் கமண்டலமும், பின் வலக்கையில் தர்ப்பைப் புல் கட்டும், மற்றொரு கையில் வேள்விக் கரண்டியும் உள்ளன.