இறைவனை மனம் உருக வேண்டினால் வீட்டில் மாற்றம் உண்டாகுமா?
ADDED :4559 days ago
உருகிய தங்கத்தில் நவமணிகள் பதிவது போல, உருகிய உள்ளத்தில்தான் இறையருள் பதியும். இதனை திருஞானசம்பந்தர்,காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது என்றே குறிப்பிடுகிறார். அதனால், உள்ளம் உருகி கண்ணீர் பெருகி அவன் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட எல்லாம் நன்மையாகவே முடியும்.