விவேகானந்தர் ரதம்: கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்கள் வரவேற்பு!
ADDED :4488 days ago
வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு விவேகானந்தர் ரதம் நாடு முழுவதும் சுற்றி வருகிறது. மதுரையில் இதற்கான ஏற்பாட்டை ராமகிருஷ்ண மடம் செய்துள்ளது. மதுரைக்கு வந்துள்ள விவேகானந்தர் ரதம், மதுரை அருப்புக்கோட்டை ரோடு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளிக்கும் வருகை தந்தது. இந்த ரதத்திற்கு சுவாமி விவேகானந்தர் வேடமணிந்த பள்ளி மாணவர் பட்டாளம் வரவேற்பு அளித்து சிறப்பித்தது.