உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்­த­கோட்­டத்தில் ஆடி கிருத்­திகை

கந்­த­கோட்­டத்தில் ஆடி கிருத்­திகை

சென்னை: ஆடி­கி­ருத்­தி­கையை முன்­னிட்டு கந்­த­கோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு அபி­ஷேகம், புஷ்­பா­லங்­காரம் உள்­ளிட்­டவை நடை­பெற உள்­ளன. முருகன் கோவில்­களில், நாளை ஆடி கிருத்­திகை கொண்­டா­டப்­பட உள்­ளது. அதை முன்­னிட்டு, சென்னை ராசப்ப செட்டி தெருவில் உள்ள கந்­த­கோட்­டத்தில், அதி­காலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்­கப்­ப­டு­கி­றது. காலை 10:30 மணிக்கு மூல­வ­ருக்கு சிறப்பு அபி­ஷே­கமும் அதை தொடர்ந்து சிறப்பு அலங்­கா­ரமும் நடை­பெ­று­கி­றது. மதியம் 1:30 மணிக்கு உற்­ச­வ­ருக்கு சிறப்பு பன்னீர் அபி­ஷேகம் நடக்­கி­றது. மாலை 6:00 மணிக்‌கு மூலவருக்கு புஷ்ப அங்கி சாத்­தப்­ப­டு­கி­றது. இரவு 7:00 மணிக்கு ரம்யா முர­ளி­கி­ருஷ்­ணனின் இன்­னிசை கச்­சே­ரியும், அதன்பின் சிறப்பு சொற்­பொ­ழிவும் நடக்­கின்­றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !