உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் 7ல் தீ மிதி விழா

செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் 7ல் தீ மிதி விழா

சேலம்: சேலம், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய ஸ்வாமி மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்து வருகிறது. முதல் முறையாக, இந்த கோவிலில் தீ மிதி விழா நடக்கவுள்ளது. இது குறித்து, செங்குந்தர் மாரியம்மன் பூ மிதித்தல் குழு தலைவர் ராஜ்குமார், செயலாளர் விஜயன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் கூறியதாவது: சேலம், செங்குந்தர் மாரியம்மன் கோவில், 400 ஆண்டு பழமை வாய்ந்தது. முதல் முறையாக பூ மிதி திருவிழா நடப்பதால், தங்க செங்கோடன் வீதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகில் ஆகஸ்ட், 6ம் தேதி அமாவாசை திதியில் இரவு, 10.30 மணிக்கு மேல் கணபதி ஹோமம், பாலக்கொம்பு நடுதல், அக்னி குண்டம் ஆரம்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி காலை, 5.30 மணிக்கு இந்த கோவிலில் முதல் முறையாக பூ மிதித்தல் திருவிழா நடக்கிறது. 250 பக்தர்கள் பூ மிதிக்கின்றனர். பக்தர்கள் பூ மிதிப்பதற்காக, 16 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !