நெல்லையில் திருவுருமாமலை பன்னிரு திருமுறை அறக்கட்டளை ஆண்டு விழா
திருநெல்வேலி:நெல்லையில் திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு அறக்கட்டளையின் 18வது ஆண்டு விழா நடந்தது. நெல்லையில் திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு அறக்கட்டளையின் 18வது ஆண்டு விழா நேற்று நடந்தது. திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் இறைவணக்கம் பாடினார். பொறுப்பு செயலர் கனகசபாபதி வரவேற்றார். தலைவர் திருஞானசம்பந்தம் விழாவை துவக்கி வைத்து பேசினார். துணிவணிகர் இலக்கிய வட்டத்தின் தலைவர் வெங்கடாச்சலம், களம்பூர் கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். "இறைவன் அடி ஞானமே ஞானம் தலைப்பில் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பேராசிரியர் செல்வநாதன் பேசினார். தொடர்ந்து மாலையில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் துவங்கின. இணை செயலாளர் செல்லையா வரவேற்றார். "மண்ணிலே வந்த பிறவியே வாலிதாம் தலைப்பில் செல்வநாதன் பேசினார். வழிபாட்டுக்குழு துணை தலைவர் காளியப்பன் பரிசுகளை வழங்கினார். பொறுப்பு செயலர் பொன்னுசாமி, எல்.ஐ.சி.,ஏஜென்ட் பகவதி முத்துக்குமார் உட்பட சிவ பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். உதவி தலைவர் சிவனு நன்றி கூறினார்.