அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :4467 days ago
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில், மஞ்சவயல் காமாட்சியம்மன் கோவிலில் 11வது ஆண்டு திருவிளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடந்தது. இதில், 401 விளக்குகளை ஏற்றி பெண்கள் மற்றும் பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்தினர். சிறப்பு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஸ்ரீ விஸ்வகர்மா கம்மாளர் உறவு முறை சமுதாயத்தினர் அளித்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.