உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி சாய்பாபா கோயிலில் நாளை ஆடி சிறப்பு வழிபாடு

தென்காசி சாய்பாபா கோயிலில் நாளை ஆடி சிறப்பு வழிபாடு

தென்காசி:தென்காசி  ஆய்க்குடி ரோட்டில் பிரசித்திபெற்ற ஸ்ரீரடி சாய்பாபா கோயிலில் ஆடி மாத கடைசி வியாழனை முன்னிட்டு நாளை (15ம் தேதி) சிறப்பு வழிபாடு நடக்கிறது. இக்கோயிலில் ஆடி மாத கடைசி வியாழனை முன்னிட்டு நாளை (15ம் தேதி) சாய்பாபாவிற்கு காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் சிறப்பு ஆராத்தி, அபிஷேகம், அர்ச்சனை நடைபெறுகிறது. கோயிலில் அமைந்துள்ள அன்னபூரணிக்கு நாளை மாலை அபிஷேகம், தீபாராதனை மாலையில் அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சுப்புலட்சுமிதுரைசாமி கல்வி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !