கரிவலம் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :4604 days ago
திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அன்று மாலை பால்வண்ணநாதசுவாமி சன்னதி கொடிமரத்திற்கு அருகேயுள்ள நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி உட்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின்பு சுவாமி சந்திரசேகரர் சுவாமி சன்னதி வெளிபிரகாரத்தில் மூன்று முறை பவனி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியார், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.