விநாயகர் சதுர்த்தி விழா: 50 ஆயிரம் சிலை வைக்க முடிவு!
ADDED :4538 days ago
வேலூர்: விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும், என, இந்து முன்னணி நிர்வாகி முருகானந்தம் கூறினார். இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், வேலூரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முருகானந்தம் கூறியது: விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 9ம் தேதி, நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.