ராமேஸ்வரம் கோயிலில் நீராடும் பக்தர்களுக்கு வழிகாட்டி பலகை
ADDED :4448 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நீராடும் பக்தர்களின் வசதிக்காக, வழிகாட்டு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றிற்கு எவ்வாறு செல்வது என்பது தெரியாமல் பக்தர்கள் திணறினர். இதை தவிர்க்க முதல் தீர்த்தம் முதல் கடைசி தீர்த்த கிணற்றிற்கு யாருடைய உதவியின்றி செல்லும் வகையில் அந்தந்த தீர்த்தங்களின் எண் குறிப்பிட்ட வழிகாட்டி பலகைகள் கோயிலில் வைக்கப்பட்டள்ளது.