கோகுலாஷ்டமி விழா
ADDED :4543 days ago
ஓசூர்: ஓசூர் ருக்மணி சத்ய பாமா சமேத கோவிலில் வரும், 28ம் தேதி கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி நேற்று(ஆக., 25) முதல் கோவிலில் பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள், குழந்தைகள் விளையாட்டு போட்டிகள் நடந்தது. நேற்று காலை பள்ளி குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டி, பாட்டு போட்டி நடந்தது. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மாலை நடந்த விழாவில் பரிசு வழங்கப்பட்டது. வரும், 28ம் தேதி நடக்கும் கோலாஷ்டமி பூஜையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. மதியம் அன்னதானம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு பரதநாட்டிம் நிகழ்ச்சி நடக்கிறது.