விருதுநகர் தூய வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி!
விருதுநகர்: விருதுநகர், ஆர்.ஆர்.,நகரிலுள்ள தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தேர்பவனி நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த ஆலய திருவிழா, ஆக.,31ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில், தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தன. 9ம் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு, மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அங்கரிக்கப்பட்ட, அன்னையின் திருவுருவ தேர்பவனி, முக்கிய வீதிகளில், கொட்டும் மழையில், தேவகோட்டை அன்பரசன் அடிகளார், மதுரை அந்தோணிராஜன் அடிகளார், அருப்புக்கோட்டை ஜெகனிவாசகர் அடிகளார், விருதுநகர் எட்வர்ட் அடிகளார், மதுரை பழங்காநத்தம் சிலுவை மைக்கேல் ராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர் நடந்தது. தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு, திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஆர்.ஆர்.,நகர் பங்குத்தந்தை ஜான் மார்ட்டின் அடிகளார் தலைமையில் பங்கு பேரவையினர், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்