நாளை 108 சங்காபிஷேகம்
ADDED :4482 days ago
கோபிசெட்டிபாளையம்: கோபியில், விநாயகர் சதூர்த்தியை தொடர்ந்து, நாளை 108 சங்காபிஷேக விழா நடக்கிறது. இந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு ஏழு அடி கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாளை காலை, 8 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜை, மகா சங்கல்பம், கும்பஸ்தானம், கும்ப பூஜை, மகா கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், மகா லட்சுமி ஹோமம், திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனையும், காலை, 10.45 மணிக்கு திருமஞ்சனம் அபிஷேகம், 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், காலை, 11.30 மணிக்கு மகா அலங்காரம், மகாதீபாராதனை, மதியம், 12 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. வரும், 12ம் தேதி மதியம், 12 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை, 4 மணிக்கு சீதா திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலம் நடக்கிறது.