அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4438 days ago
அவிநாசி : அவிநாசி அருகே ஆலத்தூரில் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆலத்தூரில், பட்டத்தரசி அம்மன், கருப்பராயன், மதுரை வீரன் சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில்களில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜைக்குபின், கும்பாபிஷேகம் நடந்தது. கோபுரம் மற்றும் மூலவர் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடந்து, மகாபிஷேகம் செய்யப்பட்டது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை வகித்து, அருளுரை வழங்கினார். எம்.எல்.ஏ., கருப்பசாமி வரவேற்றார். அமைச்சர்கள் ஆனந்தன், தாமோதரன், ஒன்றிய தலைவி பத்மநந்தினி, பேரூராட்சி தலைவி ஜெகதாம்பாள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.