கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா
ADDED :4397 days ago
ஊத்துக்கோட்டை: புரட்டாசி மாத வைபவத்தை ஒட்டி, கருட வாகனத்தில், பெருமாள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை, பிராமண தெருவில் அமைந்துள்ளது சுந்தர வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவில், சில மாதங்களுக்கு முன், சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இங்கு, புரட்டாசி மாதத்தை ஒட்டி, நேற்று முன்தினம், சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, உற்சவர் சுந்தர வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இரவு, உற்சவர், கருட வாகனத்தில், அங்குள்ள வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.