ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம்
ADDED :4636 days ago
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், எதிராஜ நாதவல்லி தாயார் நவராத்திரி உற்சவத்தில் சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளினார். கடந்த 5ம் தேதி, நவராத்திரி உற்சவம் துவங்கியது. முதல்நாள் கஜெலட்சுமி வாகனத்திலும், இரண்டாம் நாள் சர்வபூபாலன் வாகனத்திலும், நேற்று முன்தினம் மூன்றாம் நாளில், சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நவராத்திரியை முன்னிட்டு தினமும், மாலை 3:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:30 மணிக்கு கோவில் உள்வளாகத்தில் புறப்பாடு வாண வேடிக்கைகளுடன் நடைபெற்றது. அதன்பின், இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது. நவராத்திரியை முன்னிட்டு, இன்னிசை கச்சேரி நடைபெற்றது.