குரு மடம்!
ADDED :4779 days ago
மலையாள இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுபவர், பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன். பாலக்காட்டில் சித்தூர் நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அவர் வாழ்ந்த இல்லம் உள்ளது. குருமடம் என அழைக்கப்படும் இந்த இல்லத்தில் அவர் வழிபட்ட ஸ்ரீசக்கரம், இறைவடிவங்கள், ஏடுகள், எழுதுகோல், அவரது மரக்காலணி என சில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. விஜயதசமி நாளில் மாணவ-மாணவியர் அவற்றை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை!