நவ பிரம்மாக்கள்!
அனைத்தையும் படைக்கும் பிரம்மதேவன், தானே நவ வடிவங்களுடன் தோன்றி, ஒன்பது சிவலிங்கங்களை தனித்தனி கோயில்களில் வைத்து வழிபட்ட இடம், ஆந்திராவில் உள்ள அலம்பூர். பிரம்மதேவனின் அந்த நவ வடிவங்களைப் பார்ப்போம்!
குமார பிரம்மன் : திருமாலுக்கு மகனாகப் பிறந்து, படைப்புத் தொழிலை நன்கு ஆற்ற தவம்புரியும் நிலையைக் குறிக்கிறது.
அர்க்க பிரம்மன் : சூரிய மண்டலத்தில் விளங்கும் பிரம்மன். சிவாசனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் சூரிய மண்டலத்தில் அர்க்க பிரம்மன் பூஜிக்கப்படுகிறான்.
வீர பிரம்மன் : அறியாமை மிகுந்த அரக்கர்களோடு பிரம்மன் போரிட்ட கோலத்தைக் குறிக்கிறது.
பால பிரம்மன் : அத்ரி-அனுசுயா தம்பதியரிடம் குழந்தையாக தவழ்ந்த கோலம்.
சுவர்க்க பிரம்மன் : சுவர்க்கத்தைக் காப்பவனாக சுவர்க்க பிரம்மன் விளங்குகிறான்.
கருட பிரம்மன் : பிரம்மன் கருடவடிவில் வந்து, பறவை வடிவிலிருந்த முனிவர்களுக்கு உபதேசித்த கோலம்.
விசுவ பிரம்மன் : உலகினைப் படைக்கும்போது விசுவ பிரம்மன் எனப் பெயர் பெறுகிறான்.
பத்ம பிரம்மன் : திருமாலின் நாபியிலிருந்து தோன்றி, தாமரையில் வீற்றிருப்பதால் பத்ம பிரம்மன் எனப்படுகிறார்.
தாரக பிரம்மன் : தாரக மந்திரத்திற்குத் தலைவனாக இருப்பதால் தாரக பிரம்மன் என்று அழைக்கப்படுகிறான்.