உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலத்தில் நவராத்திரி பூஜை

சின்னசேலத்தில் நவராத்திரி பூஜை

சின்னசேலம்: சின்னசேலத்தில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை நவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு 17 வகையான அபிஷேகங்கள் மற்றும் மகாதீபாரதனை நடந்தது. மாலை 7 மணிக்கு நவராத்திரி குழுவினர் கொலு பொம்மை அமைத்து, பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் உற்சவருக்கு மச்ச அவதாரத்தில் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. மகா தீபாராதனையை கணேஷ்சர்மா செய்து வைத்தார். கட்டளைதாரர்கள் யாதவகுமார், ரங்கராஜன், ஆர்ய வைஸ்ய சமூக நிர்வாகி கோவிந்தசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !