சோழவந்தானில் நயினார் தொழுகை பள்ளிவாசல் திறப்பு!
ADDED :4381 days ago
சோழவந்தானில் நயினார் தொழுகை பள்ளிவாசல் கட்டடத் திறப்பு விழா நடந்தது. நகர் முஸ்லீம் ஜமாத் கமிட்டி தலைவர் ஹாஜிஅபுபக்கர் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் செல்லப்பாண்டி, பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். கமிட்டி செயலாளர் பாஷா வரவேற்றார். ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா, ரூ.70 லட்சம் மதிப்பிலான கட்டடத்தை திறந்தார்.சென்னை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் அலாவுதீன், சமுதாய பிரமுகர்கள் பங்கேற்றனர். பள்ளி அஜ்ரத் நெகமத்துல்லா நன்றி கூறினார்.